வெளியேற்றப்பட்ட ஹொங்கொங்கின் இளம் அரசியல் ஆர்வலர்!

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு ஆர்வலர் ஜோஷுவா வாங், தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் நாட்டிலிருந்துவெளியேற்றப்பட்டார்.
மாணவ போராட்டக்காரர்கள் தாய்லாந்து இராணுவத்தால் படுகொலை செய்யபட்ட 40வது ஆண்டு தினத்தை அனுசரிக்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த 19 வயது ஆர்வலர்.
வாங்கின் கட்சியான டிமொசிஸ்டொ, சீன அரசிடமிருந்த வந்த அழுத்தத்திற்கு தாய்லாந்து பணிந்து விட்டது என தெரிவித்துள்ளது. ஆனால் ஆளும் இராணுவ கவுன்சில், இது குடிவரவு அதிகாரிகளின் முடிவு என தெரிவித்துள்ளது. ஆனால் காரணம் என்னவென்று தெரிவிக்கவில்லை.
ஹொங்கொங் வாசிகள், தாய்லாந்திற்குள் முப்பது நாட்கள் விசாயின்றி நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இம்மாதிரியான சூழல் ஒன்றில் கடந்த மே மாதத்தில் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் வாங். கடந்த வருடம், ஐ.நா.,வால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட, சீன அரசின் எதிர்ப்பாளர்கள் இருவரை தாய்லாந்து வெளியேற்றியதற்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|