ரொனால்ட் ரீகனை கொல்ல முயற்சித்த ஜான் ஹிங்கிலி ஜூனியர் விடுதலையாகிறார்!

Sunday, September 11th, 2016

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை ஆக இருக்கிறார்.

வாஷிங்டனில் உள்ள ஒரு விடுதியின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரீகன் உட்பட மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஜான் ஹிங்கிலி ஜூனியர் பித்துப்பிடித்த நிலையில் இருந்த காரணத்தால் அவர் குற்றவாளி அல்ல என கண்டறியப்பட்டது.

கடந்த ஜூலை மாதம், தற்போது 61 வயதாகும் ஹிங்கிலி, அவருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ அபாயகரமாக இருக்க மாட்டார் என நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருந்தார். விர்ஜினியாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் ஹிங்கிலி வசிக்க உள்ளார். அவர் விடுதலையாவதற்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில், மாதத்தின் பல நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

150102233902_sp_john_hinckley_640x360_ap_nocredit

Related posts: