முடிவை ஏற்க மறுத்த சட்டமா அதிபரை பதவி நீக்கினார் டிரம்ப்!

ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த அந்நாட்டு பதில் சட்டமா அதிபர் சாலி யேட்சை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்களுக்கு தடை விதித்து ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு பிரபல தொழிநுட்ப நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பதில் சட்டமா அதிபர் சாலி யேட்ஸ், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், டிரம்பின் முடிவை ஏற்க முடியாது. இதற்காக வாதாட முடியாது எனத் தெரிவித்திருந்த்தார். இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அவருக்கு பதில், டானா போன்டே என்பவர் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை அரசின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் அல்லது பதவியை விட்டு செல்லலாம் என, தடையை ஏற்க மறுக்கும் தூதர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|