மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு!

Friday, July 28th, 2017

 உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் மிக ஆழமாக விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன. அவை கடல்நீரை சுழற்றும்போது காற்றாலையின் காற்றாடி சுழன்று அதன் சக்தியிலிருந்து மின்சாரம் உருவாக்கப்படுகின்றது. இதற்கு ‘ஹைவின்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நோர்வேயைச் சேர்ந்த ஸ்டேடோயில் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று கூறப்படுகின்றது. ‘ஹைவின்ட்’ திட்டத்தில் பயன்படுத்தப்படும் விசையாழிகள், 175 மீட்டர் உயரமானவை என்றும் இதன் மூலம் அதிக மின்சாரத்தினை தயாரிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் செலவு குறையும் என்று ஹைவின்ட் திட்ட இயக்குநர் லீப் டெல்ப் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மற்றும் காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது தண்ணீரில் இருந்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: