மலேசிய விமானத்தின்  பாகங்கள் கண்டுபிடிப்பு!

Friday, May 13th, 2016

கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 8ஆம் திகதி புறப்பட்டு சென்றது.

பயணித்த 2 மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரில் இருந்து மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை.

விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டன. நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டன.

ஆனால் எந்தப் பலனும் இல்லை. மாயமாகி பல மாதங்களுக்கு மேல்ஆன நிலையில், விமானத்தின் சிதைவோ, பயணம் செய்தவர்களின் உடலோ எதுவும் கிடைக்கவில்லை.

இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது.

மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகியது.இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரீயூனியன் தீவு அருகே விமானத்தின் பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு மொசாம்பிக் அருகே 2 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது மொரீசியஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா பகுதிகளில் மேலும் 2 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையும் இந்த விமானத்தின் பாகம் தான் என  தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: