பிலிப்பைன்ஸ் லுசான் தீவை துவசம் செய்த சரிகா சூறாவளி!

Sunday, October 16th, 2016

பிலிப்பைன்ஸில் உள்ள லுசான் தீவில் சக்தி வாய்ந்த சூறவாளி ஒன்று காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதால் அந்த பகுதிகளிலிருந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சரிகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறவாளி கடுமையான மழை மற்றும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றையும் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வீட்டின் கூரைகள் கிழித்தெறியப்பட, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.

இந்த சூறாவளி லுசான் தீவில் அரிசி உற்பத்தியை பாதித்துள்ளது. மேலும், சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைமா என்ற மற்றொரு சூறாவளி இந்த வார இறுதியில் இதே பகுதியை மீண்டும் தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸில் உள்ள வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

_91944707_9034b215-f42e-4832-9ec5-bcb3b3c2fb4d

_91944705_9a36a469-21ee-43eb-aa04-3b8eeb4c3613

Related posts: