பிரெக்சிட் உடன்படிக்கை – மூன்றாவது வாக்கெடுப்பும் தோல்வி!

Saturday, March 30th, 2019

பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது வாக்கெடுப்பும் தோல்வி அடைந்துள்ளது.

குறித்த உடன்படிக்கை நேற்று 3வது முறையாகவும் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டது. இதன்போது எதிராக, 344 உறுப்பினர்களும் ஆதரவாக 286 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்தநிலையில், 58 மேலதிக வாக்குகளால் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளது.

மூன்றாவது முறையாகவும் இந்த உடன்படிக்கை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அவரச கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் கால வரையரை எதிர்வரும் 29ம் திகதியுடன் நிறைவடைகிறது.

எனினும் ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய பிரெக்சிட் உடன்படிக்கை, இதற்கு முன்னர் 2 முறைகள் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: