பிரித்தானியா – துருக்கி இடையே பாதுகாப்பு துறை ஒப்பந்தம்!

Sunday, January 29th, 2017

 

பிரித்தானிய பிரதமர் தெரீசா மே மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்துவான் ஆகிய இருவரும், பாதுகாப்புத் தொழில் துறையில் 125 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக தயாராகி வருவதால், துருக்கியின் போர் விமான பலத்தை அதிகரிக்க செய்யும் இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்று மேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், துருக்கியில் தோல்வியில் முடிந்த ராணுவ அதிரடிப்புரட்சியின் போது, துருக்கிக்கு பிரிட்டனின் ஆதரவு இருந்ததைச் சுட்டிக்காட்டிய மே, சட்டத்தின் ஆட்சியை பராமரிப்பது மற்றும் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளை ஆதரித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது துருக்கிக்கு முக்கியம் என்றார்.

_93850561_gettyimages-632902642

Related posts: