பிரான்ஸில்  பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி, மூவர் மாயம்!

Tuesday, March 6th, 2018

பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப் பகுதியில் தொடர்ந்தும் பனிச்சரிவுகள் இடம்பெற்று வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன்இருக்குமாறும் மீட்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்கும் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வலியுறுத்தியுள்ளதுடன் மீட்புக் குழுக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதை தவிர்க்குமாறும் பிரான்ஸ்உள்துறை அமைச்சர் ஜெராட் கொல்லோம்ப் தனது டுவிட்டர் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: