பிரஸெல்ஸ் விமான போக்குவரத்து வழமைக்கு திரும்ப ஒரு மாதம் தேவை!

Wednesday, March 30th, 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து உடனடியாக விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரஸெல்ஸ் விமான நிலையம் நாளை முதல் தொடங்கவுள்ளது. சில குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தற்போது தொடங்கப்பட உள்ளது. அதற்காக பல்வேறு சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டது.

முற்றிலும் விமான போக்குவரத்து சீரடைய சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலத்தப்பட்டுள்ளது.

Related posts: