பாகிஸ்தானை பழிவாங்க உதவியது யார் ? தகவல் வெளியானது!

Sunday, October 2nd, 2016

இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-2சி செயற்கைக்கோள் தான் இந்திய இராணுவத்தினரின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பெருமளவு உதவியதாக தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தக்க பதிலடியை இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதனையடுத்து, பிரதமரின் அனுமதி கிடைத்ததும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் பொருட்டு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில், எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேசமயம், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இஸ்ரோவின் கார்டோசாட்-2சி செயற்கைக்கோளின் பங்கு தான் அதிகளவு என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-2சி செயற்கைக்கோள், சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பூமியை கண்காணிக்கும் வகையில் அனுப்பப்பட்டது. அமெரிக்க, இஸ்ரேல் தொழில்நுட்பத்தை விட இதில் உள்ள தொழில்நுட்பம் மிகச் சிறந்து. மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது. பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடிக்கும் சிறப்பு வாய்ந்தது இந்த செயற்கைக்கோள். முக்கியமான பகுதிகளை வீடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறனும் படைத்தது.

உரி தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாத முகாம்களை இந்த செயற்கைக்கோள் மூலம் ராணுவம் கண்காணித்து வந்துள்ளது. மேலும், ஹைதராபாத் தேசிய தொலை உணர்வு மையம் மூலம் ராணுவத்திற்கு அது தொடர்பான புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தீவிரவாத முகாம்களை சரியாக இலக்கு வைத்து துல்லியமாக நமது ராணுவம் தாக்கியுள்ளது.

ராணுவத்திற்கு தேவையான தகவல்களை வழங்கினோம். ஆனால், எந்த வகையிலான உதவி என்ற தகவலை வெளியிட முடியாது. ஆனால் கார்டோசாட் படங்கள்தான் பெரிதும் உதவின என்பதை மட்டும் தெரியப்படுத்த விரும்புகிறோம் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ராணுவத்தின் தரப்பில் இதுகுறித்த தகவலை வெளியிட மறுத்து விட்டார்கள்.

pslv_2905231f

Related posts: