பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்வு !

பாகிஸ்தானில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவடையும் நிலையில், ஜூலை மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக எடுக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்து வாக்காளர்கள் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தேச தேர்தலில் மொத்தம் 10 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த தேர்தலை விட முஸ்லீம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சத வீதத்தால் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் 20 லட்சத்து 77 ஆயிரமாக இருந்த முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 63 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?
மாண்டனீக்ரோ தேர்தல்: மாற்றம் காணுமா ஆட்சி?
மாலைத்திவில் அவசர கால சட்டத்தை நீடிக்க கோரிக்கை - மாலைத்திவு ஜனாதிபதி !
|
|