நீண்ட நாட்களுக்கு பின் அமெரிக்காவில் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை!

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற பணியால் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 29 இலட்சத்து 994 ஆயிரத்து 352 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசின் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 969 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் அதிகமாக பாதித்து வந்திருந்தது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் தான் உள்ளது.
ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு தினமும் 2 ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துவந்த அந்நாட்டில் தற்போது வைரசின் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக நேற்று அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பலி எண்ணிக்கையாகும்.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 781 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 413 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|