நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் 6.2 மெக்னிடியுட்ட அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Wednesday, September 20th, 2023

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அரச நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

நியுசிலாந்து நேரத்தின்படி இன்று முற்பகல் 9.14 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியுட்டாக 11கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் நில நடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: