நடிகர் கமலுக்கு மீண்டும் சத்திரசிகிச்சை!

Sunday, July 31st, 2016

நடிகர் கமலஹாசன் கடந்த 13–ஆம் திகதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்தார்.

உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கமலுக்கு உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 3 வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார் இந்இதனால் கமலுக்கு நேற்று மீண்டும் காலில் ஆபரே‌ஷன் செய்யப்பட்டது.

ஏற்கனவே ஆபரே‌ஷன் செய்த பகுதியில் இருந்த துகள்கள் அகற்றப்பட்டன. 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்த நிலையில் கமலுக்கு காலில் ஆபரே‌ஷன் செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட் டது.

அவருக்கு பரிசோதனை செய்தபோது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் துகள்கள் இருந்தது தெரிய வந்தது இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, “நான் இப்போது நலமாக உள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன்” என்றார். இந்த நிலையில் நடிகர் ரஜினி, கமலிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி உடல் நலம் பற்றி விசாரித்தார். அதற்கு கமல் நலமாக இருப்பதாக கூறி ரஜினிக்கு நன்றி தெரிவிதார்

Related posts: