தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ரஷ்யாவில் 5 பெண்கள் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தேவாலயத்தில் நேற்று சிறப்பு ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்ற வேளையில், தேவாலயத்தினுள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளான்.

குறித்த தாக்குதலில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். இதேவேளை, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: