தீ பரவிய கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஈரானில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி!

Friday, January 20th, 2017

ஈரானில் பழமையான கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ”பிளாஸ்கோ பில்டிங்” எனும் 17 மாடிக்கட்டிடத்தில் நேற்று (19) அதிகாலை தீ பரவியது.

9 ஆவது மாடியில் பற்றிய தீ, மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து சென்றனர்.நீரைப் பீய்ச்சி, தீயை அணைக்க பல மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடினர். தீயினால் பலமிழந்த கட்டிடம் திடீரென இடிந்து விழத் தொடங்கியது.

இதில் தீயை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இடிபாட்டில் சிக்கிய கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என 38 பேர் காயமடைந்துள்ளனர்.

5-1

Related posts: