டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு!

Sunday, April 16th, 2023

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, அலுவலகம் புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான வணிகப் பணியின் ஒரு பகுதியாக, ரஷ்ய கூட்டமைப்பின் வர்த்தக மற்றும் தொழில்துறை வர்த்தக கழகத்தின் தலைவர் செர்ஜி கேத்ரின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

அவர், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஷாலேஷ் படக்கை சந்தித்து, பேச்சவார்த்தைகளையும் நடத்தினார்.

அவர் தனது உரையில், “ரஷ்ய கூட்டமைப்பின் வர்த்தக மற்றும் தொழில்துறைக் கட்டமைப்பின் தலைமைக்கு நன்றி.

ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டமைப்பானது, அதன் அளவு, பிரதிநிதித்துவ நிலை மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் காணப்படுகின்றது.

கடந்த 14 ஆண்டுகளில் எங்கள் கூட்டு நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரலில் மிகப்பெரிய வணிக நோக்கம், ரஷ்ய கூட்டமைப்பின் வர்த்தக மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானமை தான்.

2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகம் சாதனைகளை முறியடித்து வருகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர வர்த்தகம் 35.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதோடு, இந்த நிலைமையானது 2021 ஆண்டின் சாதனையை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

செர்ஜி கேடிரின், பொருளாதார உறவுகளின் ஊடான இத்தகைய விரைவான வளர்ச்சியானது உலகளாவிய வெளிநாட்டு பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்களால் பெரிதும் எளிதாக்கப்படுகிறது.

மறுபுறம், இந்தியா பாரம்பரியமாக ரஷ்யாவின் முக்கிய மூலோபாய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதனால் பலதரப்பு வடிவங்களிலும் வணிக தொடர்புகள் உருவாகி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் வணிகர் கழகத்தின், இந்தியாவுடனான வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவது சர்வதேச நடவடிக்கைகளின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.

ரஷ்யாவின் தலைவர், 2006 முதல், ரஷ்யாக் கூட்டமைப்பு இந்தியாவுடனான ஒத்துழைப்புக்கான வணிக தரப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருவதாக நினைவு கூர்ந்தார்.

இது சந்தைகளில் ரஷ்ய மட்டுமல்ல, இந்திய தொழில்முனைவோரின் நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: