ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ -19 பேர் காயம்!
Monday, July 30th, 2018ஜப்பானை புரட்டிப் போட்ட, ‘ஜாங்டரி’ புயலால், 19 பேர் காயம் அடைந்தனர். மேலும், பல இடங்களில் மிக கன மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானில் கன மழை பெய்து வருகிறது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. சமீபத்தில், ‘டோக்கியோ உள்ளிட்ட நகரங்களை, ஜாங்டரி புயல் கடுமையாக தாக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று, ஜாங்டரி புயல் தாக்கியது.
இந்த புயலால், கிழக்கு ஜப்பானில் மிக பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிழக்கு ஜப்பானில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த புயலில் சிக்கி, 19 பேர் காயம் அடைந்தனர். பல இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால், சாலைகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related posts:
|
|