சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை – பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!

Tuesday, March 21st, 2017

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஜாவித் மியாந்தத் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி வீரர்கள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சமீபத்தில் கூட பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் முகமது இர்பான், ஷார்ஜில், காலித் போன்ற வீரர்கள் சூதாட்டதில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஜாவித் மியாந்தத், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து சூதாட்ட பிரச்சினைகளில் சிக்குவது வருத்தம் அளிக்கிறது

இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts: