சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி, 20 பேர் காயம்

Friday, May 12th, 2017

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது.

காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சில இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.180 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: