சீனாவின்  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Wednesday, December 28th, 2016

பதவியை  காரணம்  காட்டி  லஞ்ச  ஊழல் முறைகேட்டில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம்  சீனாவில்  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சீன  அரசாங்கத்தில்  1997ஆம் ஆண்டு  முதல் 2014 ஆம் ஆண்டுவரை விளையாட்டுத்துறை  துணை அமைச்சராக ஜியாவோ டியான் கடமையாற்றியுள்ளார். அத்தோடு   சீனாவிற்கான   ஒலிம்பிக்குழு   உறுப்பினராகவும்  இவர்  செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது அதிகார பலத்தை கொண்டு விளையாட்டுத்துறை சார் பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், இடமாற்றங்களை செய்வதற்குமாக மொத்தமாக 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு நான்யாங்   நகர  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் ஜியாவோ டியான் லஞ்சம் பெற்றக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் நன்யாங் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed__1_

Related posts: