சீனாவின் இணைய பாதுகாப்பு விதிமுறையால் தடுமாறும் உலக வணிகம்!

Friday, August 12th, 2016

சீனாவில் முன்மொழியப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு விதிமுறைகளை திருத்தி அமைக்க வேண்டி உலகின் மிகப் பெரிய வணிகக் குழுக்களின் கூட்டமைப்பு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய திருத்தங்கள் வர்த்தகத்தை பாதிப்பதோடு, நாட்டை தனிமைப்படுத்திவிடும் என்ற எச்சரிக்கையையும் அது விடுத்துள்ளது.இந்த பரிந்துரைகள் தகவல் திருட்டை சுலபமாக்கும் மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகள் மீறுவதாக உள்ளது என சீன பிரதமர் லி கியாங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சில கூடுதல் பாதுகாப்பு நன்மைகளை உள்ள கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதன் மூலம் வெளிநாட்டு போட்டியாளர்களை நெருக்கடியில் சிக்க வைக்க சீனா முயற்சிப்பதாக அச்சம் எழுந்துள்ளது.தீவிரவாதம் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க ஒரு கட்டுப்பாடு வேண்டும் என சீன தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வணிகக் குழுவின் கூட்டமைப்பில் அமெரிக்க வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு, காப்பீட்டாளர்கள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மெக்சிக்கோவை சேர்ந்த உற்பத்தியாளர்களும் அடங்குவார்கள்.

Related posts: