சவுதிஅரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப்பல்மீது தாக்குதல்!

சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த சரக்குகப்பல் மீது இந்து சமுத்திர பகுதியில் ஏவுகணை தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது என லெபான் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் கப்பலிற்கோ கப்பலில் இருந்தவர்களிற்கோ பாதிப்பு ஏற்படவில்லை கப்பல் தொடர்ந்து பயணித்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளதா என ஆராய்ந்துவருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய என்12 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத ஆயுதத்தினால் கப்பல் தாக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லைபீரிய கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலே தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை!
அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத் தீ !
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - அமெரிகாவில் 7 பேர் பலி!
|
|