கியூபா வரும் ரஷ்ய போர் கப்பல்கள் – உஷார் நிலையில் அமெரிக்கா!

Saturday, June 8th, 2024

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நான்கு ரஷ்ய கப்பல்கள் அடுத்த வாரம் கியூபா தலைநகர் ஹவானாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூன் 12 முதல் 17 வரை குறித்த கப்பல்கள் தலைநகரில் நங்கூரமிடும் என்று கியூபா வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கசான் மற்றும் மூன்று கடற்படைக் கப்பல்கள் அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள கியூபாவை வந்தடையவுள்ளன. கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தூரம் 145 கிலோ மீற்றர் ஆகும்.

இதனால் ரஷ்ய கப்பல்கள் குறித்து அமெரிக்கா உஷார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்களை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: