கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு படை!

கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட்மெக்மரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயைகட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளியின் காரணமாகவும் பெற்றோலிய வளத்தைக் கொண்ட மண் காணப்படுவதன் காரணமாகவுமே இந்த தீயை கட்டுப்படுத்த முடியாத நிலைமை தொடர்வதாக நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனால் 88 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் 8 ஆயிரம் பேர் வரையில் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 17 ஆயிரம் பேர் வரையில் ஆபத்து மிக்க பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நில காட்டுத் தீயினால் பாரிய அளவில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீயினால் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட 10 குடும்பங்கள் வரையில் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|