கடும் மழை – பிரேசிலில் 13 பேர் உயிரிழப்பு!

Thursday, July 25th, 2019

பிரேசில் நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கடும் மழை பெய்துள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கி தத்தளிக்கின்றன. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: