கடத்தப்பட்ட சிறுமி 32 வருடங்களுக்கு பின் மீட்பு!

Wednesday, December 26th, 2018

பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண், 32 வருடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

பொலிவியாவில் 1980 களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார்.

இதுபற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா பொலிஸார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்தனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா பொலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Related posts: