ஏரியில் விழுந்து விமானம் விபத்து!

Monday, August 29th, 2016

நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் குட்டி விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கனடாவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் நேற்று இரவு விமானியின் கட்டுப்பட்டை இழந்த குட்டி விமானம் ஒன்று நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் அந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அந்த ஏரியில் இருந்து விமானத்தின் சில பாகங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால் கிடைக்கப்பெற்ற பாகங்கள் குறிப்பிட்ட விமானத்தினுடையது அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அந்த விமானத்தின் விமானி உள்ளிட்ட இருவரையும் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். குறிப்பிட்ட ஏரியின் அருகாமையில் அமைந்துள்ள விமானத்தளத்தில் தரையிறங்கும் நோக்கில் சமீபித்த அந்த குட்டி விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்த ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே விமான விபத்தில் சிக்கிய பெண் ஒருவரை அந்த ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்று காப்பாற்றியதில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாயமான இருவரையும் பொலிசார் உள்ளிட்ட மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: