எல்.ஐ.சி. கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

Friday, October 20th, 2017

கொல்கத்தாவின் ஜவகர்லால் நேரு சாலையில் ஜீவன் சுதா என்ற மிகப்பெரிய வணிக வளாகமான எல்.ஐ.சி. அலுவலகத்தின்  16-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

.இதன் காரணமாக வேலைக்கு வந்திருந்த ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மற்ற தளங்களுக்கும் தீ பரவும் அபாயம் இருந்ததால் அங்கிருந்த ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீ அசுர வேகத்தில் பரவியதால் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தீப்பிடித்த தளத்தில் ஸ்டேட் வங்கியின் சர்வர் அறை உள்ளது.எனவே, பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் தீயில் கருகியிருக்கலாம் என தெரிகிறது. உள்ளே ஊழியர்கள் யாராவது சிக்கியிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. தீயை முழுமையாக அணைத்த பிறகே சேத விவரம் தெரியவரும்.

Related posts: