எத்தியோப்பிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை – மெர்கல் எச்சரிக்கை!

Tuesday, October 11th, 2016

போராட்டக்காரர்களை ஒடுக்க அதிக ஆயுத ஆற்றலை பயன்படுத்துவதற்கு எதிராக, எத்தியோப்பா பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல், உள்ளூர் ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார்.

எத்தியோப்பாவின் பெரிய இரண்டு இனக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையினரின் வன்முறை தொடர்பான எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கு எத்தியோப்பிய பிரதமர் ஹெய்லேமரியம் டெஸ்சாலென் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

எத்தியோப்பாவின் எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூக குழக்களின் பிரதிநிதிகளையும் மெர்கல் சந்தித்து இருப்பதாக ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவின் குடியேறிகள் இடம்பெயர்வு நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய அழுத்தத்தில் உள்ள மெர்கெல், சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறுவதைத் தடுக்க ஆப்ரிக்க தலைவர்களின் உதவி வேண்டும் என்று விரும்புகிறார்.

_91762505_1c631b9b-26e6-4693-9761-2769bf637fac

Related posts: