உக்ரைன் போராட்ட களத்தில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை – மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என எச்சரிக்கை!

Monday, March 28th, 2022

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை உருவாகும் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்துகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்த போரில் அமெரிக்கா பங்கேற்றால், ரஷ்யா அமெரிக்கா மீது அணு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தலாம் என பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவை தனது நாட்டின் எல்லையிலிருந்து முழுமையாக வெளியேற்றுவது சாத்தியமற்றது என்பதை புரிந்து கொண்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் இது மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: