ஈரான் வாங்கிய ஏர்பஸ் விமானம் தெஹரானில் தரையிறங்கியது!

Friday, January 13th, 2017

ஏர்பஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் வாங்கிய நிலையில் அது தெஹரானுக்கு வந்தடைந்துள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் மேற்குலக உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து ஈரான் விலைக்கு வாங்கும் முதல் விமானம் இதுவாகும்.

பல தசாப்தங்களாக பொருளாதார ரீதியாக தனிமைப்பட்ட நிலையில் இருந்து, ஈரானின் மீண்டெழுந்து வருவதன் அடையாளமாக இந்த விமானத்தின் வரவு பார்க்கப்படுகிறது. இறுதியாக, நூறு ஏர்பஸ் விமானங்களை ஈரான் வாங்கி முடிக்கும்.

ஈரான் தனது அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கொண்டதற்கு பிரதிபலனாக அதன் மீதான பொருளாதார தடை உத்தரவுகளை பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் விலக்க ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இந்த ஒப்பந்தமானது முடிவுக்கு வந்தது

_93545948_gettyimages-631539024-1

Related posts: