இந்தோனேசியா சிறையில் தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு!

Wednesday, September 8th, 2021

இந்தோனேசியாவில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு 41 கைதிகள் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதைப்பொருள் கடத்தல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,225 கைதிகளை அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

00

Related posts: