இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, July 16th, 2019

இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்காரில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடியில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளதுடன், லம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Related posts: