ஆப்கான் பாராளுமன்றம் மீது ராக்கெட் தாக்குதல்!

Monday, March 28th, 2016

ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற கட்டிடம் மீது இன்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூல் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தில் சற்று முன்னர் பலத்த ஓசையுடன் ராக்கெட் ஒன்று மோதியுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் வளாகத்திற்குள் நுழையும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள ஒரு வளாகத்தை கட்ட இந்திய நிதியுதவி செய்ததும், கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பிரதமரான நரேந்திர மோடி இதனை திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது

Related posts: