அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரிகள் விசாரணை!

Saturday, February 11th, 2017

கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள 128 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த 128 சட்டமன்ற உறுப்பினர்களும் கடத்தப்பட்டனரா என விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் 4 குழுக்களாக அதிகாரிகள், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி தமிழ்ச் செல்வன் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி எட்வின் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணை அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIADMK-leaders2

Related posts: