அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம் – தமிழக அரசியல் அதிரடி!

Saturday, February 18th, 2017

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள டிடிவி தினகரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளர்.

மேலும், சசிகலா மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் அவர் நீக்கியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்தவித தொடர்புகளும் வைத்துக் கொள்ள கூடாது என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.அவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அதிமுக சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மதுசூதுனன் தெரிவித்துள்ளார்.

அவைத்தலைவர் மதுசூதனனின் இந்த அதிரடி அறிவிப்பால், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.இன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள பழனிச்சாமி தனது தனிப்பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில், அரசியல் குளறுபடிகள் நிகழும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

201702171223568877_TTV-Dinakaran-Sasikala-expelled-from-AIADMK_SECVPF

Related posts: