300 பந்துகளை 3 முறை சந்தித்து சண்டிமல் சாதனை!

Friday, December 8th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியான டில்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சண்டிமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த ஆண்டிலே அதிகமான தடவைகள் 300 இற்கும் அதிகமான பந்துகளை டெஸ்ட் போட்டிகளில் சந்தித்ததே அந்த சாதனையாகும்.

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஸ் அணிக்கெதிரான போட்டியில் 300 பந்துகளை சந்தித்து 138 ஓட்டங்களை குவித்திருந்தார். அதன்பின்னர் பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்த தொடரில் அபுதாபி மைதானத்தில் 372 பந்துகளைச் சந்தித்து 155 ஓட்டங்களை ஆட்டமிழக்காது குவித்திருந்தார்.

நடைபெற்றுவரும் டில்லி டெஸ்ட் போட்டியிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமல் மொத்தமாக 361 பந்துகளை சந்தித்து 164 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுண்டிமலை அடுத்து இந்தாண்டில் 3 தடவைகள் 250 இற்கும் அதிகமான பந்துகளை இந்திய வீரர் புஜாரா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது 80 ஆவது இன்னிங்ஸில் பத்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த சண்டிமல், மத்தியூஸிடன் இணைத்து நான்காவது விக்கெட்டில் 477 பந்துகளை சந்தித்து 181 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம் புரிவதற்கும் காரணமாகத் திகழ்ந்தார்

Related posts: