3 ஆம் இடத்தினை தனதாக்கியது கரவெட்டி பிரதேச செயலக அணி!

Tuesday, October 25th, 2016

புனர்வாழ்வு பெற்ற வீரர்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண பிரதேசங்களைக் கொண்ட தெரிவு அணிகளுக்கிடையிலான 3ஆம் இடத்திற்கான உதைப்பந்தாட்ட போட்டி (23.10.2016) அன்று துரையப்பா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. அதில் உடுவில் பிரதேச செயலக தெரிவு அணியை எதிர்த்து கரவெட்டி பிரதெச செயலக தெரிவு அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் துஷி தொடர்ச்சியாக 3 கோல்களைப் போட்டு அசத்தினார். அணியின் மேலும் ஒரு கோல் ரதன் பெற்றுக்கொடுக்க முதற்பாதியாட்டம் 04.00 என்ற அடிப்படையில் முடிவுற்றது. 2ஆவது பாதியாட்டத்தில் உடுவில் பிரதேச செயலக தெரிவு அணி முதல் கோலை பதிவு செய்தது. அணியின் 5ஆவது கோலை ரதன் போட இறுதியாட்ட நேர முடிவில் உடுவில் பிரதேச செயலக தெரிவு அணியை 05:01 என்ற ரீதியில் வீழ்த்தி 3ஆம் இடத்தினை தனதாக்கியது கரவெட்டி பிரதெச செயலக தெரிவு அணி. கரவெட்டி அணி சார்பில் துஷிகரன் 03, ரதன் 2கோலினை போட்டனர்.

15-1350283147-dengu-fever600 copy

Related posts: