110 ஐ எட்டிய மூவர்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Thursday, November 3rd, 2016

 

இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாராரேவில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 412 ஓட்டங்களை இலக்காக வைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 537 ஓட்டங்களை குவித்தது.

இதில் குசால் பெரேராவும், உபுல் தரங்காவும் 110 ஓட்டங்களை குவித்தனர். இதேபோல் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடி 247 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னேவும் 110 ஓட்டங்கள் எடுத்தார்.3 பேரும் சொல்லி வைத்தார் போல் சரியாக 110 ஓட்டங்களை குவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: