T – 20 உலகக்கிண்ணம்: மிரட்டல் விடுக்கும் மழை!

Friday, March 18th, 2016

20 ஓவர் உலக கிண்ணத்தை முதல்முறையாக வெல்லும் வேட்கையுடன் ஆயத்தமாகியிருக்கும் அவுஸ்திரேலிய அணி இன்று தனது முதலாவது போட்டியில் இன்று நியூசிலாந்த அணியை எதிர்கொள்கின்றது  இந்த ஆண்டில் தான் விளையாடிய ஆறு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 25 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியது.

பரீட்சாத்த முயற்சிகள் எல்லாம் முடிந்து, உலக கிண்ணத்துக்கு முழு அணியாக களம் புகுந்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள், அதிரடி சூரர்கள், திறமையான பந்துவீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. மேக்ஸ்வெல், வார்னர், ஆரோன் பிஞ்ச், ஷேன் வாட்சன், தலைவர் ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் பந்து வீச்சை சிதைத்து விடுவார்கள்.

இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா விளையாட வாய்ப்புள்ளது.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஊதி தள்ளிய உற்சாகத்துடன் உள்ள நியூசிலாந்து அணி அடுத்து அவுஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்க வியூகங்களை தீட்டியுள்ளது.

அனேகமாக நியூசிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று தெரிகிறது. இந்த ஆட்டத்திற்கு மழை ஆபத்து இருக்கிறது. தர்மசாலாவில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இன்றும் அங்கு மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: