பயிற்சியாளரை மாற்றும் விவகாரத்தில் குழப்பம்!

Monday, August 5th, 2019

நியுசிலாந்துடனான தொடர் முடிவடையும் வரையில் இலங்கை அணியின் பயிற்சியாளர்களை மாற்றவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைச்சருடனான சந்திப்பின்போது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இதனை உறுதி செய்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சண்டிக ஹதுருசிங்கவை எப்படி நீக்கப்போகின்றீர்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடம் கேள்வி எழுப்பிள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் பயிற்சியாளர்களை நியுசிலாந்திற்கு எதிரான சுற்றுப்பயணம் முடிவடையும் வரை நீக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர்கள் ஹதுருசிங்கவை எவ்வாறு நீக்கப்போகின்றனர், இவருக்கு பதில் புதிதாக யாரை நியமிக்கப்போகின்றனர் என்பதை 24 மணி நேரத்தில் எழுதி தரவேண்டும் என கேட்டுள்ளேன் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றம் தொடர்பான குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts: