தொடரை வென்று கைப்பற்றியது இலங்கை!

Thursday, August 1st, 2019

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் சைபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் செளமிய சர்கார் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 36 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் செளமிய சர்கார் 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக 3 விக்கெட்களையும் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

அதன் அடிப்படையில் இலங்கை அணி பங்களாதேஷ் உடனான தொடரை 3 க்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.  ஓய்வு பெற்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவை கௌரவிக்கும் முகமாக இன்றைய போட்டிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Related posts: