இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ருமேஸ் அத்தநாயக்க!

Thursday, August 8th, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

இதேவேளை நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான 22 பேர் கொண்ட அணியும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் தினேஸ் சந்திமாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த குழுவிற்கு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை கிரிககெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: