வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!

Friday, November 5th, 2021

2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணிக்காக 41 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சரித் அசலங்க போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

இம்முறை உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற தவறியுள்ளது.

இந்தநிலையில் தாம் பங்குபற்றிய இறுதி போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி.

Related posts: