விளையாட்டு வீரரின் தங்கப்பதக்கத்தை பறித்த நிர்வாகம்!

Friday, September 15th, 2017

ரஷ்யாவின் பாராலிம்பிக் பளுதூக்கும் வீரர் ஒருவர் அந்நாட்டு ஜனாதிபதியின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து பதக்கம் அளிக்கும் விழாவில் கலந்து கொண்டதால் நிர்வாகம் அவருக்கான பதக்கத்தை பறித்துள்ளது.

பின்லாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இச்சம்பவம் நடந்துள்ளது.ரஷ்யாவின் Vladimir Balynets(32) பளுதூக்கும் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி தங்கம் வென்றுள்ளார். பதக்கம் அளிக்கும் விழாவின்போது ஆர்வ மிகுதியால் தனது டிராக்சூட்டை கழட்டி உள்ளே அணிந்திருந்த டி-ஷர்ட்டை காண்பித்துள்ளார்.

குறித்த டி-ஷர்ட்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஐஸ் ஹொக்கி ஆடிய புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. இது விளையாட்டு தொடர்பான சட்டத்தின்படி தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் என்பதால் அவரது பதக்கத்தை பறித்ததுடன் இந்த ஆண்டில் இனி நடைபெறவிருக்கும் அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை விதித்துள்ளனர்.

Related posts: