விராட் கோலி முதலிடம்!

Thursday, June 15th, 2017

ஒருநாள் கிரிக்கட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களது தரப்படுத்தல் வரிசை வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் இலங்கை அணியைச் சேர்ந்த யாரும் இல்லைமுதல் இடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 862 புள்ளிகளுடன் உள்ளார் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், .பிடி. வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

நான்காம் இடத்தில் ஜோய் ரூட்டும், 5ம் இடத்தில் கேன் வில்லியம்சனும் உள்ளனர் குயின்டன் டி கொக், பஃப் டு ப்ளெசி, பாபர் அசாம், மார்டின் கப்டில் ஆகியோர் 6ம்,7ம்,8ம் மற்றும் 9ம் இடங்களைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் சிகார் தவான் 10ம் இடத்தைப் பெற்றுள்ளார்

Related posts: