வலுவான நிலையில் மேற்கிந்தியா : தடுமாறுகிறது இலங்கை!

Saturday, June 9th, 2018

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
மேற்கிந்திய தீவுகளின் குயின்ஸ் பார்க் ஓவல் Queen’s Park Oval மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.
இதில் இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் அதிகூடிய ஓட்டங்களாக 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் மிகுவல் குமின்ஸ் மூன்று விக்கட்டுக்களையும், சனொன் கேப்ரியல் மற்றும் கெமர் ரோச் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 131 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களை இழந்துள்ளது.
முன்னர் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: