வடக்கின் போர் நாளை ஆரம்பம்!

Wednesday, March 9th, 2016

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான டெஸ்ட் ஆட்டம் நாளை(10) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

நாளை ஆரம்பமாகும் இந்த ஆட்டம் சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. சென். ஜோன்ஸ் கல்லூரி அணி கானமிர்தன் தலைமையிலும் யாழ். மத்திய கல்லூரி அணி அலன்ராஜ் தலைமையிலும் களமிறங்குகின்றன. கடந்த வருடம் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றது.

நடப்பு வருடம் யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டாக உள்ளமையால் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் மத்தி தீவிரம் காட்டும். மட்டுமல்லாமல் பழக்கப்பட்ட ஆடுகளம் மத்தியின் மற்றொரு பலமாகவும் செல்லப்படுகிறது.

ஆட்டத்தைக் காரணம்காட்டி கல்லூரிச் சீருடையுடன் என்த மாணவனும் வீதிகளில் உலா வருதலோ அல்லது பணம் சேகரிப்பில் ஈடுபடுதலோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டமிழப்பு ஏற்பட்டாலோ அல்லது வீரர்கள் 50, 100 ஓட்டங்களைப் பெற்றாலோ ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மீறுவோர் தண்டனைக்குரியவர்களாகக் கணிக்கப்படுவார்கள்.

மைதானத்திற்குள்ளும் வெளியும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழு அதிகாரமும் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: